நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மகாநாடு | தினகரன்

நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மகாநாடு

மக்களுக்கான இதழியலை நோக்கி என்ற தலைப்பிலான நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மகாநாடு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5,6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.  

பன்னாட்டு மக்கள் இதழியல் இயக்கம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை மற்றும் உதயன் பத்திரிகை இணைந்து இந்த மகாநாட்டை நடத்துகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் தலைமையில் இந்த மகாநாடு சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகாநாட்டில் இதழியல் துறை தொடர்பான ஆய்வுகள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் பாரம்பரியக் கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த மகாநாட்டிற்கு உலகெங்கும் இருக்கின்ற தமிழ் இதழியல்துறை சார்ந்த பணியாற்றும் புலமையாளர்கள், ஆய்வு மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், கல்வியியலாளர்கள் என்று பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.  

நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் கலந்து சிறப்பிக்கவுள்ளதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பிப்பார்.   


Add new comment

Or log in with...