பாஜக, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது | தினகரன்

பாஜக, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது

பாஜக வேட்பாளர் பட்டியலை தலைமை வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை 184 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. முதல் பட்டியலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா காந்திநகர் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல் காங்கிரஸ் தலைமை இதுவரை 9 வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. இதில் 228 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குல்பர்கா தொகுதியிலும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவாண், நான்தேட் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பாஜகவில் இதுவரை வெளியான பட்டியல்களில் மொத்தம் 306 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது மக்களவைத் தேர்தலில் முதல் மற்றும் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி- சிக்பள்ளாப்பூர், கே.எச். முனியப்பா- கோலார் தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான மீனாட்சி நடராஜன், மத்திய பிரதேசத்தின் மந்த்சவுர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமை நேற்று 9-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.


Add new comment

Or log in with...