சீனாவுடன் இத்தாலி பட்டுப்பாதை ஒப்பந்தம் | தினகரன்

சீனாவுடன் இத்தாலி பட்டுப்பாதை ஒப்பந்தம்

சீனாவின் புதிய ‘பட்டுப் பாதை’ திட்டத்தில் பங்குபெறும் உடன்பாட்டில் இத்தாலி கையழுத்திட்டுள்ளது.

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே போக்குவரத்து, வர்த்தக இணைப்புகளை ஏற்படுத்தும் அத்திட்டத்திற்கான உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ள முதல் ஜி7 தொழில்வள நாடு இத்தாலியாகும்.

உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்திவரும் நிலையில் இந்த உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. அது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அதிருப்தியை ஏற்படுத்துமென கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரோமில், இத்தாலிக்கும் சீனாவுக்கும் இடையே 29 புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தான நிகழ்ச்சியில், சீன ஜனாதிபதி சி சின்பிங்கும் இத்தாலியப் பிரதமர் குஸ்ப்பே கொன்டெயும் பங்கேற்றனர்.

ஒப்பந்தங்களின் மதிப்பு 5 இலிருந்து 7 பில்லியன் யூரோ வரை இருக்கும் என்று இத்தாலிய ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன.

சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தும் இயல்பு இல்லாதவை புதிய இணக்கக் குறிப்புகள். அவற்றின்படி, இத்தாலிய ஓரஞ்சுப் பழங்கள் சீனாவுக்கு ஏற்றுமதியாகும்.

பயணம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளிலும் மேம்பட்ட ஒத்துழைப்பு இனிமேல் சாத்தியமாகலாம்.


Add new comment

Or log in with...