கஸகஸ்தான் தலைநகருக்கு முன்னாள் தலைவரின் பெயர் | தினகரன்

கஸகஸ்தான் தலைநகருக்கு முன்னாள் தலைவரின் பெயர்

கஸகஸ்தானில் பதவி விலகிய நீண்ட கால தலைவரை கெளரவிக்கும் வகையில் அந்நாட்டு தலைநகர் அஸ்தானின் பெயரை நூர் சுல்தான் என்று மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய இடைக்கால பிரதமராக பதவி ஏற்ற காசிம் ஜொமார்ட் டொகேயேவ் கடந்த சனிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று தசாப்தங்களாக கஸகஸ்தான் தலைவராக இருந்து கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்த நூர்சுல்தான் நசர்பெயேவுக்கு அர்ப்பணமாக தலைநகரின் பெயரை மாற்றும் பரிந்துரை கடந்த புதன்கிழமை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பெயர்மாற்ற அறிவிப்புக்கு எதிராக அல்மட்டி மற்றும் ஏனைய நகரங்களில் சிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

கஸகஸ்தான் தலைநகர் 1997 இல் அல்மட்டியில் இருந்து அஸ்தானுக்கு மாற்றப்பட்டது.


Add new comment

Or log in with...