மாலி கிராமத்தில் 100க்கு மேற்பட்டவர்கள் கொலை | தினகரன்

மாலி கிராமத்தில் 100க்கு மேற்பட்டவர்கள் கொலை

பாரம்பரிய டோகோன் வேட்டையாளர்களின் ஆடையுடன் வந்த ஆயுததாரிகள் மத்திய மாலி கிராமம் ஒன்றில் 100க்கும் அதிகமானவர்களை கொன்றிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மொப்டி பிராந்தியத்தின் ஒகோசொக்கு கிராமத்தை சுற்றிவளைத்திருக்கும் துப்பாக்கிதாரிகள் வீடுகளில் இருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் விபரித்துள்ளனர்.

புலானி இன மக்களை இலக்கு வைத்தே கடந்த சனிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மாலியில் இன மற்றும் ஜிஹாத் குழுக்களின் வன்முறைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்திருப்பதாக மாலிக்கான தற்போதைய ஐ.நா தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலம் மற்றும் நீரை பெறுவது குறித்து பகுதி நாடோடிகளான புலானி மேய்ச்சல்காரர்கள் மற்றும் டொகோன் வேட்டைக்காரர்கள் இடையில் மோதல் நீடித்து வருகிறது.

புலானிக்கள் ஜிஹாதி குழுக்களுடன் தொடர்புபட்டிருப்பதாக டொகோ இனத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும் தம்மை தாக்குவதற்கு இந்த வேட்டைக்காரர்களுக்கு இராணுவம் ஆயுதம் வழங்குவதாக புலானிக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த இரு இனக்குழுக்களுக்கும் இடையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற மோதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.


Add new comment

Or log in with...