வேற்றுக்கிரகங்கள் 4000ஐ எட்டியது | தினகரன்

வேற்றுக்கிரகங்கள் 4000ஐ எட்டியது

பூமி ஓர் அங்கமாக இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1992ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் பிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரோன் நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகங்களைக் கண்டறிந்ததே நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கிரகங்கள் கண்டறியப்பட்ட முதல் முறையாகும். ஐரோப்பாவின் ‘தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா’ இதுவரை 4,000க்கும் மேலான கிரகங்களை, சூரிய மண்டலத்துக்கு வெளியே இருப்பதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...