வர்த்தக விஸ்தரிப்புக்கு தாய்லாந்துடன் ஒப்பந்தம் | தினகரன்

வர்த்தக விஸ்தரிப்புக்கு தாய்லாந்துடன் ஒப்பந்தம்

இலங்கை தாய்லாந்து வர்த்தக சபை (Sri Lanka Thailand Business Council) மற்றும் தாய்லாந்தின் வணிகச் சபைக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. தாய்லாந்து வர்த்தகசம்மேளனக் கட்டத்தில் இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது. 

தாய்லாந்து வணிக சபை தலைவர் கேலின் சரசின் மற்றும் இலங்கை தாய்லாந்து வர்த்தக சபை தலைவர் ரிசான் நசீர் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.

தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ஷெனுகா செனவிரத்ன, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் சூலமநீ சார்ட்ஸுவான், இலங்கை தாய்லாந்து வர்த்தக சபை மற்றும் தாய்லாந்தின் வணிக சபை ஆகியவற்றின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாக அமைந்தது. 1933 ஆம் ஆண்டில் தாய்லாந்து வர்த்தகர்களின் சங்கம் மற்றும் தாய்லாந்தின் வணிக சபை நிறுவப்பட்டது.  

இலங்கை தாய்லாந்து வர்த்தக சபை 2000 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த ஐந்து வர்த்தக உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இருநாட்டுக்கும் இடையிலான முதலீடுகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது.

இதில் தற்பொழுது 100ற்கும் அதிகமான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.   

(ருஸைக் பாரூக்)


Add new comment

Or log in with...