முதலீட்டு சபையின் அலுவலகம் ஹம்பாந்தோட்டையில் திறப்பு | தினகரன்

முதலீட்டு சபையின் அலுவலகம் ஹம்பாந்தோட்டையில் திறப்பு

இலங்கை முதலீட்டு சபையின் விசேட சேவைகள் காரியாலயமொன்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் திறந்துவைக்கப்பட்டது. துறைமுகத்துடன் தொடர்புடைய முதலீட்டாளர்களுக்கு இலங்கை முதலீட்டுச் சபையினூடாக பல்வேறு சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கும், தகவல்களை வழங்குவதற்கும் இக்கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் அபிவிருத்தி உபாய மார்க்கங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதியமைச்சர் நளின் பண்டார, இலங்கைக்கான சீனத் தூதுவர் சென் சஎயுஆன், இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் சம்பிகா இத்தமல்கொட, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேய் ரென், துறைமுக கப்பல் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் தலைவர் ஸ்ரீநாத் ஹேரத் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் கலந்துகொண்டனர். 

இலங்கை முதலீட்டுச் சபை, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த சேவை நிலையத்தினூடாக தென் மாகாணத்தினை இலக்காகக் கொண்டு செயற்படும் ஏற்றுமதி வியாபாரத்தினை மேலும் பயனுள்ள பல சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இத்தோடு வியாபாரத்திற்கு பெற்றுக் கொடுக்க முடியுமான சலுகைகைகள்; தொடர்பாக வியாபார சமூகத்திற்கு தெளிவினை பெற்றுக் கொடுப்பதற்கும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

இலங்கை முதலீட்டுச் சபை, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஆகியவற்றிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதோடு கைத்தொழில் வலயத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தகாரர்களுடனும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.   

(ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்)  


Add new comment

Or log in with...