வீவோ V15Pro ஸ்மார்ட் போன் இலங்கையில் அறிமுகம் | தினகரன்

வீவோ V15Pro ஸ்மார்ட் போன் இலங்கையில் அறிமுகம்

Vivo கையடக்கத்தொலைபேசியின் புத்தம் புதிய V15Pro ஸ்மார்ட் போன் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. NEX மாதிரிக்கு பின்னர் துறையின் முதலாவது மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பத்துடன் கூடிய முன்புற Elevate ஆன கமராவை கொண்ட தொலைபேசியாக V15Pro அமைந்துள்ளது. முழுத்திரையை கொண்ட ஸ்மார்ட்ஃபோனாக அமைந்துள்ளதுடன், மதிநுட்பமான பிரத்தியேக உதவி அம்சங்களை கொண்டதுடன், பாவனையாளரை புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்ததாக அமைந்துள்ளது.  Vivo ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் கருத்துத் தெரிவிக்கையில்,“எமது பிரதான பெறுமதிகளில் ஒன்றாக புத்தாக்கம் அமைந்துள்ளது. துறையின் முதலாவது Elevate ஆன கமராவுக்கு மேலாக, ஒப்பற்ற bezel-less திரையை கொண்டுள்ளது.  

எமது சாதனங்களில் எப்போதும் நாம் புத்தாக்கமான உள்ளம்சங்களை இணைக்க எதிர்பார்க்கிறோம். அதாவது, உயர் தரம் வாய்ந்த கமராக்கள் மற்றும் மதிநுட்பமான AI சேவைகள் போன்றன மொபைல் அனுபவத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளன. V15Pro என்பது நுகர்வோரின் சகல விதமான வாழ்க்கை அங்கங்களுக்கும் ஒப்பற்ற மேம்படுத்தப்பட்ட தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பின் தெளிவான உதாரணமாக அமைந்துள்ளது” என்றார். இதன் அறிமுக நிகழ்வு கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.     


Add new comment

Or log in with...