மூவினங்களையும் சேர்ந்த ‘கிழக்கு ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு’ விழா | தினகரன்

மூவினங்களையும் சேர்ந்த ‘கிழக்கு ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு’ விழா

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து இனங்களையும் சார்ந்த தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களைக் கௌரவிக்க அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா. எஸ். இஸ்ஸடீன் தெரிவித்தார்.

‘கிழக்கு ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு’ எனும் தலைப்பில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு விழா தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்களிடம்தகவல்களைக் கொண்டு செல்லவும், தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைவெளிக்கொணர்ந்து தீர்வைப் பெற்றுக் கொடுக்கவும், அரசின் அபிவிருத்திப் பணிகளை மக்கள் முன் கொண்டு செல்லவும்எனஊடகவியலாளர்கள் ஆற்றும் பணிகள் அளப்பெரியவையும் போற்றத்தக்கவையுமாகும்.இருப்பினும், அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை வெளிப்படுத்துவது முதல் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பது வரை பல தசாப்த கலாமாக ஊடகவியலாளர்கள் ஆற்றும் பணிக்கான கௌரவம் கிடைப்பதில்லை.

இவற்றைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சார்ந்த தெரிவு செய்யப்பட்டசிரேஷ்ட ஊடகவியலாளர்களையும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளத்தின் உறுப்பினர்களையும் கௌரவிக்கும் ‘கிழக்குஊடகவியலாளர் கொளரவிப்பு’ விழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ் விழாவில் 50 ஊடகவியலாளர்களும் 3 சமூக சேவையாளர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகர, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல அரசியல் முக்கியஸ்தர்கள் இதில் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.  

அத்துடன், இவ்விழாவினை கல்முனையில் ஆஸாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு25 வருடங்கள் பூர்த்தியாகுவதை முன்னிட்டு சம்மேளத்தின் வெள்ளி விழாவை மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் தலைநகர் கொழும்பில் இவ்வருட நடுப்பகுதியில் நடாத்துவதற்கும் சம்மேளனம் திட்டமிட்டுள்ளதாக தலைவர் மீரா எஸ். இஸ்ஸடீன் மேலும் தெரிவித்தார்.

(எம்.எம்.ஏ.ஸமட்)


Add new comment

Or log in with...