36 நாடுகளுக்கு இலவச வருகை தரும் வீசா நடைமுறை | தினகரன்

36 நாடுகளுக்கு இலவச வருகை தரும் வீசா நடைமுறை

36 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு வருகை தரும் வீசாக்களை அரசாங்கம் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து இலவசமாக வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த வசதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆரம்ப கட்டமாக ஆறு மாதங்களுக்கு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தடவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடக்கம் ஆறு மாத காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையை முன்னேற்றுவதற்கு இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...