திஸ்ஸவுக்கு எதிரான வழக்கு: சமரசமாக நிறைவு செய்ய இணக்கம் | தினகரன்

திஸ்ஸவுக்கு எதிரான வழக்கு: சமரசமாக நிறைவு செய்ய இணக்கம்

திஸ்ஸவுக்கு எதிரான வழக்கு: சமரசமாக நிறைவு செய்ய இணக்கம்-Tissa Attanayake's Forged Document case Compromised

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான போலி ஆவண தயாரிப்பு தொடர்பான வழக்கை சமரசமாக நிறைவு செய்து வழக்கை வாபஸ் பெற இரு தரப்பும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்  போது வேட்பாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று காணப்படுவதாக தெரிவித்த குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதான மேல்நீதிமன்ற நீதவான் விகும் களுவாரச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் இருதரப்பும் சமரச உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வழக்கு ஏப்ரல் 04 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...