குறைந்த வெளிச்சத்தில் செயற்படும் OPPO F11 Pro அறிமுகம் | தினகரன்

குறைந்த வெளிச்சத்தில் செயற்படும் OPPO F11 Pro அறிமுகம்

குறைந்த வெளிச்சத்தில் செயற்படும் OPPO F11 Pro அறிமுகம்-With Low Light Photography-Oppo F11 Pro Launch in Sri Lanka

48+5MP dual rear camera உடன் தயாரிக்கப்பட்டுள்ள OPPO F11 Pro புத்தாக்கமான தொழில்நுட்பம் மற்றும் நவீன உள்ளம்சங்களின் சிறந்த ஒன்றிணைவாக அமைந்துள்ளது.

குறைந்த வெளிச்சத்தில் செயற்படும் OPPO F11 Pro அறிமுகம்-With Low Light Photography-Oppo F11 Pro Launch in Sri Lanka

உலகளாவிய ரீதியில் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாக திகழும் OPPO, தனது F தொடர் ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகளை இலங்கையில் விஸ்தரிக்கும் வகையில் புதிய OPPO F11 Pro தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. குறைந்த ஒளியில் சிறந்த தெளிவான புகைப்படங்களை எடுக்கக்கூடிய திறன் கொண்டதாகவும், இதர புத்தாக்கமான தொழில்நுட்ப அம்சங்களையும் இந்த தொலைபேசி கொண்டுள்ளது. 

48MP  ultra-clear கமரா கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன், rising camera மற்றும் panoramic screen உடன் பாவனையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. OPPO F11 Pro ஐ நாடு முழுவதிலுமுள்ள Abans, Dialog, Singhagiri, Daraz, OPPO அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்கள் மற்றும் OPPO பிரத்தியேக காட்சியறைகள் போன்றவற்றிலிருந்து மார்ச் 29 ஆம் திகதி முதல் கொள்வனவு செய்ய முடியும். இதன் விசேட அறிமுக விலை ரூ. 74,990 ஆக அமைந்துள்ளது.  Thunder Black மற்றும் Aurora Green ஆகிய வர்ணங்களில் அறிமுகம் செய்யப்படும்.

Selfie Expert இலிருந்து Brilliant Portrait
குறைந்த வெளிச்சத்தில் செயற்படும் OPPO F11 Pro அறிமுகம்-With Low Light Photography-Oppo F11 Pro Launch in Sri Lankaஇளம் தலைமுறையினர் அனைவரின் மனங் கவர்ந்த கமரா தொலைபேசி நாமமான OPPO, எப்போதும் இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமான புத்தாக்கமான மொபைல் தொலைபேசிகளை வழங்குவதில் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், தம்மைச் சூழவுள்ள விடயங்களை படமெடுத்து பகிர்ந்திட வாய்ப்பளிக்கிறது. ‘‘Selfie’களை ஸ்மார்ட்ஃபோன் புகைப்படமெடுத்தலில் புகழ்பெற்ற அம்சமாக கருதுவதுடன், OPPO முதன் முதலில், இந்த Selfie திறனை அறிமுகம் செய்ததுடன், அதனை தொடர்ச்சியாக நவீன ளநடகநை தொழில்நுட்பத்துடனும், முன்புற கமராவுடனும் மேம்படுத்தியிருந்தது. ளநடகநை புகைப்பட திறனில் இவ்வாறான புத்தாக்கத்தை மேற்கொண்டிருந்ததனூடாக, OPPO ஐ “Selfie Expert” ஆக மாற்றியிருந்ததுடன், இலங்கையிலும், தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் மனங்கவர்ந்த நாமமாக அமைந்துள்ளது. தொலைபேசியில் காணப்படும் சிறந்த ‘Selfie’ புகைப்பட அம்சம், வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ்பெற்றுக் காணப்படுவது மாத்திரமன்றி, OPPO இன் கீர்த்தி நாமத்தையும் ஆதிக்கத்தையும் ஒப்பற்ற “Selfie Expert” ஆக உயர்த்தியிருந்தது. OPPO தொடர்ச்சியாக புத்தாக்க அம்சங்களை மேம்படுத்தி, கண்கவர் F9 ஐ அறிமுகம் செய்திருந்தது.

இதில் முதன் முறையாக இரட்டை பின்புற கமரா அம்சம் உள்ளடக்கப்பட்டிருந்தது. F9 இல் அறிமுகம் செய்யப்பட்ட புரட்சிகரமான இரட்டை பின்புற கமரா தொழில்நுட்பத்துக்கு மேலாக, OPPO F11 இல் காணப்படும் அம்சங்கள் F தொடரை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதாக அமைந்திருக்கும். மேலும் OPPO நாமத்தை "Selfie Expert" என்பதிலிருந்து "Brilliant Portrait" எனும் நிலைக்கு கொண்டு செல்வதாக அமைந்திருக்கும்.

Ultra-clear Image க்காக 48+5MP Dual rear இரவு வேளை புகைப்படமெடுத்தலுக்காக Ultra-clear Night Mode
OPPO வின் சக்தி வாய்ந்த கமரா தொழில்நுட்பத்தைக் கொண்டு F11 மற்றும் F11 Pro ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், F தொடரில் காணப்படும் நவீன கமரா கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பின்புற கமரா பொதுவான வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், F11 மற்றும் F11 Pro ஆகியவற்றில் காணப்படும் ultra-high திறன் வாய்ந்த 48MP+5MP dual camera கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 

குறைந்த வெளிச்சத்தில் செயற்படும் OPPO F11 Pro அறிமுகம்-With Low Light Photography-Oppo F11 Pro Launch in Sri Lanka

F1.79 aperture, ball-bearing closed-loop VCM, 6P lens மற்றும் 1/2.25- அங்குல பட உணரிகள் போன்றன அதிகளவு ஒளியம்சத்தை வழங்குவதாக அமைந்திருக்கும். பகல் நேர வெளிச்சத்தில், இச்சாதனம் நேரடியாக 48MP ultra HD படங்களை வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. குறைந்த வெளிச்சத்தில் F11 தெரிவுகள் "வுநவசயஉநடட வநஉhழெடழபல" ஊடாக பகுப்பாய்வு மூலம் தரவு சேகரிப்பு 1.6μm pixel அளவுக்கு நிகரானதாக எடுக்கப்பட்டு, photosensitive pixel ஐ விட இரண்டு மடங்கு அதிகரித்து, பிரகாசமான மற்றும் low-noise night portraits எடுக்க உதவியாக அமைந்துள்ளது.

இந்த அறிமுகம் தொடர்பாக OPPO ஸ்ரீ லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி கருத்துத் தெரிவிக்கையில், “மொபைல் புகைப்பட துறையில் புரட்சிகரமானதாக அமைந்துள்ள நாமம் எனும் வகையில், OPPO F11 Pro அடுத்த கட்ட ‘Brilliant Portrait’ புகைப்படக் கலையில் முன்னோடியாக திகழும். நவீன 48MP னரயட சநயச கமரா மற்றும் பெருமளவு இதர சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன், எமது நுகர்வோருக்கு எந்த ஒளிக் கட்டமைப்பிலும் ‘Brilliant Portrait’ புகைப்படங்களை எடுத்துக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும். ஒப்பற்ற ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை வழங்குவதாக அமைந்திருக்கும். சிறந்த கட்டமைப்பு, இயற்கை வடிவமைப்பு போன்றவற்றுடன் OPPO F11 Pro இனால் நவீன புகைப்பட அம்சம் அமைந்துள்ளது.” என்றார்.

குறைந்த வெளிச்சத்தில் செயற்படும் OPPO F11 Pro அறிமுகம்-With Low Light Photography-Oppo F11 Pro Launch in Sri Lanka

F11 மற்றும் F11 Pro ஆகியன ultra-night mode  மற்றும் Dazzle color mode ஆகியவற்றைக் கொண்டுள்ளன. OPPO இன் system-level optimization தீர்வானது, ஸ்மார்ட்ஃபோன் புகைப்படத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்வு சுயமாக படமெடுக்கும் சூழலை இனங்கண்டு அதை இலக்கு வைக்கப்பட்ட செம்மையாக்கலுக்கு உட்படுத்தும். ultra-night mode இல், முகங்களை இனங்கண்டு, குறைந்த ஒளிக்கு ஏற்ற வகையில் சருமத்தின் வர்ணத்தை சீராக்கம் செய்யும். இது மதிநுட்பமான வகையில் noise அளவை குறைப்பதுடன், குறைந்த வெளிச்சத்தில் தெளிவான புகைப்படங்களை எடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

ஹார்ட்வெயர் மற்றும் சொஃப்ட்வெயர் ஆகியவற்றின் ஒப்பற்ற இணைவுடன் OPPO F11 மற்றும் F11 Pro ஆகியன சிறந்த பின்புற கமரா திறனை வழங்குவதுடன், இளம் வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக உலகின் சிறந்த தருணங்களை தமது வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் படமெடுத்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும்.

குறைந்த வெளிச்சத்தில் செயற்படும் OPPO F11 Pro அறிமுகம்-With Low Light Photography-Oppo F11 Pro Launch in Sri Lanka

A Panoramic திரை மற்றும் இயற்கை அழகை வெளிக்கொணரும் வகையிலான இயற்கையான Gradient வடிவமைப்பு
“எளிமை என்பதே நேர்த்தியின் இறுதி வடிவம்” எனும் டா வின்சியின் கூற்றுப்படி, F11 Pro இல் காணப்படும் உள்ளம்சங்களை விவரிக்கக்கூடியதாக இருக்கும். இதில் காணப்படும் சிறந்த panoramic திரையினூடாக முன்புற கமராவை மறைத்து வைத்திருக்க முடிவதுடன், “notchless” ஆக திகழ்ச் செய்து கண்கவர் முழுத்திரை அனுபவத்தை சேர்க்கிறது. பாரம்பரிய கையடக்க தொலைபேசிகளில் காணப்படும் அம்சங்களுடன் ஒப்பிடுகையில் இதில் அடங்கியுள்ள 6.53-அங்குலத் திரை மற்றும் 90.9% screen-to-body ratio ஊடாக பெரியளவிலான படங்களை எடுக்க முடிவதுடன், களிப்பூட்டும் அம்சங்கள் மற்றும் கேமிங் அனுபவங்களை பெறுவதற்கு அதிகளவு இடவசதியை கொண்டிருக்கும்;.

OPPO F9 இல் gradient அலங்கார போக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், F11 தொடரில் புதிய வடிவமைப்புடன் vivid இயற்கை அழகு உள்வைக்கப்பட்டுள்ளது. “natural creation” எனும் கொள்கைக்கமைய வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், OPPO இனால் இயற்கை ஒளியின் வெளிப்பாடு காண்பிக்கப்படுவதுடன், F11 இனூடாக வர்ண போக்கில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. செயன்முறை மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டிருந்த புரட்சியினூடாக இது எய்தப்பட்டிருந்தது. அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வர்ணங்களில் ஒன்றான Thunder Black ஊடாக OPPO க்கு F11 வெளிப்புற கட்டமைப்பில் inky black அறிமுகம் செய்ய முடிந்தது. மேலும் சிவப்பு மற்றும் நீல வர்ணத் தெரிவுகளையும் உள்ளடக்கியிருந்தது. மேலும் OPPO பிரத்தியேகமான aurora green வர்ணத்திலும் காணப்படுகிறது. நீலம்-பச்சை கலப்பு வர்ணத்தில் கோடுகள் அமைந்துள்ளன. வெவ்வேறு ஒளி மற்றும் நிழல்களில், இந்த இரு வர்ணங்களும் பிணைந்து, ஒன்றாக புதிய எடுப்பான தோற்றத்தை வழங்குகின்றன.

குறைந்த வெளிச்சத்தில் செயற்படும் OPPO F11 Pro அறிமுகம்-With Low Light Photography-Oppo F11 Pro Launch in Sri Lanka

OPPO தொபைபேசிகள் எப்போதும் சாதாரண தொடர்பாடலுக்கான கையடக்க தொலைபேசிகள் என்பதற்கு அப்பால் சென்று கலையம்சமாக அமைந்துள்ளன. F11 தொடரில் காணப்படும் சிறந்த panoramic திரை ஊடாக புரட்சிகரமான “natural creation” என்பதை உள்வாங்குவதாக அமைந்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுக்கு மேலதிகமாக, OPPO F11 தெரிவுகள் பாவனையாளரின் அனுபவத்தை மேம்படுத்தி, பொதுவாக காணப்படும் பிரச்சினைகளான அதிகளவு வெப்பமடைதல், வேகம் குறைதல் மற்றும் பற்றரி ஆயுள்காலம் போன்றவற்றை நிவர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளன. OPPO F11 PRO இல் ColorOS 6 அடங்கியுள்ளது. இது புகழ்பெற்ற கேம்களுக்கு விசேட செம்மையாக்கலை வழங்குவதாக அமைந்துள்ளது. ஸ்மார்ட்ஃபோனின் நவீன வடிவமைப்பு போடர்அற்ற தோற்றத்தைச் சேர்க்கிறது. மேலும், OPPO cloud ஊடாக பாவனையாளர்களுக்கு 5GB வரை தரவுகளை இலவசமாக சேமித்து வைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மறுபுறம், OPPO F11இல் காணப்படும் gradient வர்ண வடிவமைப்பு 6.5 அங்குல panoramic திரையுடன் காணப்படுவதுடன், 4GB RAM + 128GB ROM கொண்டுள்ளது. இதில் VOOC flash charge 3.0 காணப்படுவதுடன், 48MP+5MP இரட்டை பின்புற கமரா மற்றும் 16MP முன்புற கமரா ஆகியன காணப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்ஃபோன் 4020mAh பற்றரியை கொண்டுள்ளதுடன், ColorOS 6 ஐயும் கொண்டுள்ளது.

மேலும், OPPO ஸ்ரீ லங்கா 4 வெவ்வேறு மாதிரிகளை ஒரே தடவையில் அறிமுகம் செய்யும் முதல் தடவையாக இது அமைந்துள்ளது. ஏனைய இரண்டு மாதிரிகள் A5s மற்றும் A1k ஆகியனவாகும். இவை இரண்டும் OPPO இன் பிரத்தியேகமான waterdrop திரையை கொண்டுள்ளதுடன், 2GB RAM + 32GB ROM ஐயும் கொண்டுள்ளன. A5sஇல் 13MP + 2MP dual rear கமரா காணப்படுவதுடன், இதில் 6.2” HD waterdrop திரை அடங்கியுள்ளது. 8MP முன்புற கமராவுடன் AI Beauty தொழில்நுட்பம், 4230mAh super பற்றரி திறனுடன் Colour OS 5.2 இல் இயங்குகின்றது.

A1k இல் 5MP முன்புற கமராக காணப்படுவதுடன், 8MP  பின்புற கமரா காணப்படுகிறது. இது மதிநுட்பமான வினைத்திறன் வாய்ந்த ColorOS 6 இல் செயற்படுகின்றது. நீடிக்கப்பட்ட 4000mAh பற்றரி திறனை கொண்டுள்ளது. 6.1’’ Waterdrop திரையையும் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...