விதுதய ரிட்ஸ்பரி நீச்சல் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய விசாகா, புனித பேதுரு கல்லூரிகள் | தினகரன்

விதுதய ரிட்ஸ்பரி நீச்சல் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய விசாகா, புனித பேதுரு கல்லூரிகள்

ரிட்ஸ்பரி சொக்லெட், இலங்கையின் நீச்சல் போட்டிகள் தொடர்பில் உன்னத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அதன் இரண்டாம் கட்டமாக அண்மையில் நடாத்திய2019ற்கான விதுதய ரிட்ஸ்பரி உள்ளக நீச்சல் போட்டிகளில் மகளிர் பிரிவுக்கான வெற்றிக் கிண்ணத்தை கொழும்பின் விகாசா பாடசாலை பெற்றுக் கொண்டதுடன் ஆண்கள் பிரிவில் பம்பலபிட்டிய புனித பேதுரு கல்லூரி வெற்றிவாகை சூடிக்கொண்டது. மகளிர் பிரிவின் இரண்டாம் இடத்தை கொழும்பு,சிறிமாவோபண்டார நாயக்க வித்தியாலயமும்,ஆண்கள் பிரிவின் இரண்டாம் இடத்தை மொரட்டு வை புனித செபஸ்தியன் கல்லூரியும் பெற்றுக் கொண்டன.

விதுதய ரிட்ஸ்பரி நீச்சல் போட்டிகளில் அனுசரணையாளராக திகழும் ரிட்ஸ்பரி, இந்நாட்டின் அதிவிசாலமான நீச்சல் தடாகத்தைக் கொண்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து இப்போட்டிகளை நடாத்தியது.

120ற்கும் அதிக பாடசாலை மற்றும் நீச்சல் விளையாட்டுச் சங்கங்களின் ஊடாக 2000ற்கும் அதிக நீச்சல் வீரர்கள் பங்குபற்றிய இந்நிகழ்வானது,மார்ச் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நீச்சட்தடாக வளாகத்தில் இடம்பெற்றது. இதுதொடர்பில் கருத்துதெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக உப வேந்தர் பேரா.சம்பத் அமரதுங்க,விதுதய உள்ளக பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டியை சிறந்த முறையில் நடாத்திமுடிப்பதற்குரிட்ஸ்பரி எமக்குஉறுதுணையாக இருந்தமையையிட்டுநாம் மிகவும் மகிழ்ச்சியுறுகிறோம்.

மேலும் மாணவர்களின் உடல் மற்றும் உளவளத்தினைஅதிகரிப்பதற்குநீச்சல் போட்டிகளில் ஈடுபடுமாறு மாணவர்களை வலியுறுத்தும் விதமாக ரிட்ஸ்பரி மேற்கொள்ளும் பராட்டத்தக்க நடவடிக்கைகள் நீச்சல் வீரர்களைமேலும் ஊக்கப்படுத்துகிறது.'என தெரிவித்தார்.

சிபிஎல் ஃபுட்ஸ் இன்டர் நெஷனல் தனியார் நிறுவனத்தின் விநியோக முகாமையாளரான நிலுப்புல் த சில்வா' தமது திறமைகளை வெளிப்படுத்தவும் துணிச்சலுடன் செயற்படவும் மாணவர்களை ஊக்குவிப்பதற்கு நம் நிறுவனம் என்றும் அர்ப்பணிப்புடன்செயற்படும். மேலும் இளையநீச்சல் வீரர்களுக்கு தமது திறமையை வெளிப்படுத்துவதற்கு இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்பட முடிந்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம்.'என தமது உரையின் போது தெரிவித்தார்.


Add new comment

Or log in with...