இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை | தினகரன்


இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை

துபாயில் ரி-10 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக கருதப்படும் போட்டி ஒன்றில் இங்கிலாந்து கவுண்ட்டி அணிகளான சர்ரே - லாங்காஷைர் அணிகள் மோதின.

சர்ரே அணி துடுப்பாட்டம் செய்யும்போது அந்த அணியின் முன்னணி வீரர்களான வில் ஜேக்ஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 29 பந்தில் 105 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொழில்முறை கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் 30 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக இருந்து வருகிறது. தற்போது வில் ஜேக்ஸ் அதை முறியடித்துள்ளார்.


Add new comment

Or log in with...