விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு | தினகரன்

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) இடம்பெற்ற இந்த விபத்தில், நல்லூர் யமுனா ஏரியைச் சேர்ந்த சேது அன்ரனி (79) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்திற்குள்ளான  49 சிசி மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்தைத் தொடர்ந்து விபத்திற்குள்ளான மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

(மயூரப்பிரியன் -யாழ்.விசேட நிருபர்)


Add new comment

Or log in with...