பஸ் வண்டியில் நடமாடும் நூலகம் | தினகரன்

பஸ் வண்டியில் நடமாடும் நூலகம்

இரத்தினபுரி பாணந்துறை வீதியில் பயணிக்கும் தனியார் பஸ் வண்டியொன்றில் நடமாடும் நூலகமொன்று நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

பண்டாரகம பிரதேச சபை தலைவர் தேவேந்திர பெரேராவின் சிந்தனைக்கமையவே இந்த நடமாடும் நூல் நிலையம் பரீட்சார்த்தமாக நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.  

நடமாடும் நூல்நிலையத்தை ஏனைய பஸ் வண்டிகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு பஸ்வண்டி ஊழியர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  

இந்த பஸ் வண்டியில் பயணிகளின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் நூல்கள், பத்திரிகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பயணிகள் ஆர்வத்துடன்  வாசித்துப் பயன்பெற்றுவருவதாக பஸ் வண்டி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 

பஸ்வண்டியில் நடமாடும் நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஒலிபெருக்கியில் பாட்டுகள் ஒலிப்பதும் நிறுத்தப்பட்டுள்ளதாக பஸ் வண்டியின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.  

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...