அம்பாறையில் போஷாக்கு உணவின்றி கால்நடைகள் இறப்பு | தினகரன்

அம்பாறையில் போஷாக்கு உணவின்றி கால்நடைகள் இறப்பு

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள மாடுகள் போஷாக்குணவின்றி அதிகம் சிரமங்களை எதிர்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது. முறையான மேய்ச்சல் தரையில் தங்களுக்குத் தேவையான தினசரி உணவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.  

மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள பெருமளவிலான மாடுகள், நெல் அறுவடை நிறைவடைந்த வெற்றுக்காணிகளிலேயே தங்களது அன்றாட தீனியைப் பெற்றுக் கொள்வதற்கு உரிமையாளர்களினால் நிர்ப்பந்திக்கப்படுகின்றன.  

தற்போது அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிகரித்த உஷ்ணம் காரணமாக, மாடுகளுக்கான நிறையுணவு, குடிநீர் என்பன சீராகக் கிடைக்காத ஒரு நிலையே பெரிதும் காணப்படுகின்றது. இதனால், மாடுகள் உயிர்வாழ்வதற்கான போஷாக்குணவு கிடைக்காமல் போவதாகவும், மாடுகள் செத்து மடிவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.  

இவைதவிர, மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புப் பிரதேசங்களில் மேலதிக வருமானத்திற்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கேனும் குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் முறையான தீனி வழங்காது தவிர்ந்து கொண்டுள்ளனர். இதனால், குறித்த மாடுகள் பிரதான மற்றும் உள்ளூர் வீதிகளிலும், வீடுகள், வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள சுற்றுப்புறச் சூழலிலும் அலைந்து திரிவதைக்காணக் கூடியதாக உள்ளது. இதனால், குறித்த பிரதேசங்களில் தினசரி விபத்துக்கள் அதிகரித்துள்ளதுடன், உடமைகளுக்கும் இழப்புக்கள் ஏற்பட்டுவருகின்றன.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)


Add new comment

Or log in with...