கிழக்கில் 724 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் | தினகரன்

கிழக்கில் 724 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்

கிழக்கு மாகாணத்தில்   எதிர்வரும்   25ஆம் திகதி 724 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை  வழங்க இருப்பதாக கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வெ.தவராஜா தெரிவித்தார். 
 
அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண சபையில் தமிழ், சிங்கள மொழி மூலமான ஆசிரியர்களுக்குரிய வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனை நிரப்புவதால் எமது மாகாண சபையின் கல்வித் தரம் மேம்படும்.  
 
ந்த  ஆசிரிய நியமனங்களை வழங்குவதை விரைவுபடுத்துமாறு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கல்வி அமைச்சை அறிவுறுத்தியுள்ளார். 
 
இந்நியமனங்கள் தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற தமிழ், சிங்கள மொழி மூலமான ஆசிரிய வெற்றிடங்களைப் பொறுத்தே இந் நியமனம் வழங்கப்பட இருக்கிறது.இதன் அடிப்படையில் சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள் 617 பேரும், தமிழ்மொழி மூலமான ஆசிரியர்கள் 107 பேரும் நியமிக்கப்படவுள்ளனர் என்றார்.
 
(புளியந்தீவு தினகரன் நிருபர்)

Add new comment

Or log in with...