குடிநீரே இனிமேல் உலக மக்களின் பெரும் பிரச்சினை! | தினகரன்

குடிநீரே இனிமேல் உலக மக்களின் பெரும் பிரச்சினை!

1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக நீர்தினம்  பிரகடனப்படுத்தப்பட்டது. பிரதி வருடமும் மார்ச் 22ம் திகதி உலக நீர்தினமாக  அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தூயநீருக்கு நிறமோ, சுவையோ, மணமோ கிடையாது. தூயநீருக்கான  பற்றாக்குறைதான் உலகெங்கும் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கப்  போகின்றது.நாம் வாழும் பூமி படிப்படியாக உஷ்ணம் அடைந்து வருவதால் வட, தென்  துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன. பனிக்கட்டிகள் தண்ணீராக  மாறி சமுத்திரங்களைச் சென்றடைகின்றது. இதனால் கடல் மட்டம் எமக்கு  தெரியாமலேயே உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதன் காரணமாக உலகில் உள்ள  குட்டித்தீவுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.இது தண்ணீரினால்  ஏற்படுகின்ற பாதிப்பாகின்றது. 

பூமியில் உள்ள நீர் ஆவியாகி மீண்டும் புவியை வந்தடைவதை நீர்  வட்டம் என்பர். கடல், ஏரி, மரம் செடிகளில் இருந்து ஆவியாகும் நீர் அதே அளவு  பூமிக்கு மழை, பனி மூலம் வந்து சேர்கின்றது. நீர் வட்டம் தொடர்ந்து  நிலவுவதனால்தான் புவியில் உயிரினங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கின்றன.  

தண்ணீரை நாம் பருக முடியாத நிலை ஏற்பட்டால் 72  மணித்தியாலங்களுக்குப் பின்னர் மயக்கமுற வேண்டிய நி​ைலமை உருவாகலாம்.

இதன்  மூலம் நீரின் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். நாம் பருகும் நீர்  தூய்மையானதாக இருத்தல் அவசியம்.குடிதண்ணீர் நமது உடலில் காணப்படுகின்ற  நச்சுப் பொருட்களையும் உப்பையும் வெளியேற்றும் காரியத்தை ஆற்றுகிறது.  குருதியில் தென்படுகின்ற நீர் மூலம் தான் ஊட்டச் சத்துகள் உயிரணுக்களைச்  சென்றடைகின்றன.  

மனித குலம் உட்பட அத்தனை ஜீவராசிகளும் உலகில் நிலைப்பதற்கு  நீர் மிகமுக்கியமானதாகும். விண்ணிலிருந்து விழும் ஓர் நீர்த் துளியும்  வீணாக கடலுடன் சங்கமமாக விட மாட்டேன் என புராதன மன்னர்களில் ஒருவரான  பராக்கிரமபாகு கூறி வைத்தார். அவரது இக்கூற்று நீரின் அவசியத்தையே  உணர்த்துகிறது. என்பதை சரித்திரவாயிலாக அறிய முடிகின்றது. மஹா  பராக்கிரமபாகு உட்பட இலங்கையின் மன்னர்கள் அனைவரும் நீரின் அவசியத்தை  உணர்ந்து கொண்டுதான் அக்காலத்தில் பாரிய குளங்களை அமைத்தனர்.

இன்று  உலகில் ஆறில் ஒரு பகுதி மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறமுடியாமல  அல்லலுறுகின்றனர். உலக சுகாதார ஸ்தாபனம் (டபிள்யூ. எச். ஓ) வெளியிட்ட  அறிக்கையின் பிரகாரம் 2025ம் ஆண்டாகும் போது உலக சனத்தொகையில் நாற்பது  சதவீதத்தினர் சுத்தமான குடிநீரின்றி துன்பப்படுவார்கள் என்பது  கண்டறியப்பட்டது. அத்துடன் சர்வதேசமெங்கும் சுமார் 40தொடக்கம் 50கோடி   பேர் நீருடன் தொடர்பான நோய்களினால் அவதியுறுகின்றனர் என்றும்  தெரியவருகின்றது.  

மழைநீரை பயன்படுத்துவதற்காக தேசிய கொள்கை ஒன்றை  நீர்ப்பாசனத்திற்கு பொறுப்பான அமைச்சு வகுத்து மக்களுக்கு பயன் அளிக்கும்  வகையில் செயல்படுத்தி வருகின்றது. நீரின் வீண் விரயம், குழாய் நீரின்  பெறுமதி, நீர்ப் பாதுகாப்பு, நீர் மாசடைதல், நீர்ப்பற்றாக்குறை விடயங்கள்  தொடர்பாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நீர்வழங்கல்  வடிகாலமைப்புச் சபை நடவடிக்ைககளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையில்  வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் நீர் முகாமைத்துவம் வாயிலாக சுத்தமான  குடிநீர் வசதி பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் இலட்சியமாகும்.

(அருணா தருமலிங்கம்)

வந்தாறுமூலை


Add new comment

Or log in with...