இந்திய மக்களிடம் மகிழ்ச்சி இல்லை! | தினகரன்

இந்திய மக்களிடம் மகிழ்ச்சி இல்லை!

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டு, 140 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஐ.நாவின் சார்பு நிறுவனமான 'Sustainable Development Solutions Network' 2019ம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தனிநபர் வருமானம், ஆரோக்கிய வாழ்வின் அத்தியாவசிய தேவைகள், சமூக சுதந்திரம், ஊழலின்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஃபின்லாந்து, டென்மார்க், ேநார்வே ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவுக்கு 19 வது இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 156 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 140 வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உலக மகிழ்ச்சி தினம் நேற்று 20 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்த பட்டியலை ஐ.நா வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு 133 வது இடத்தில் இருந்த இந்தியா, 7 இடங்கள் சரிந்து 140 வது இடத்திற்குச் சென்றுள்ளது. பாகிஸ்தான் 67 வது இடத்திலும், சீனா 93 வது இடத்திலும் உள்ளன. மகிழ்ச்சி குறைந்த நாடாக தெற்கு சூடான் உள்ளது. மேலும், மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அதிகம் வாக்களிக்க வருவார்கள் என்றும் ஐ. நா கூறியுள்ளது.


Add new comment

Or log in with...