பெலிஅத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் உயிரிழப்பு | தினகரன்

பெலிஅத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெலிஅத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினருமான  கபில அமரகோன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

மோதரவல, பல்லத்தர பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் (20) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர், தங்காலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று (22) காலை உயிரிழந்துள்ளார்.

படுகாயத்துடன் காணப்பட்ட இவரை, அவரது உறவினரொருவரே வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்.


Add new comment

Or log in with...