ளுஹாத் தொழுகை | தினகரன்

ளுஹாத் தொழுகை

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்;  ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும்,ளுஹாத் தொழுமாறும், வித்ருதொழுது விட்டு உறங்குமாறும் என மூன்று விஷயங்களை நபி (ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விடமாட்டேன். (புஹாரி)

சுன்னத்தான தொழுகைகளில் ஒன்றான ளுஹாத் தொழுகையானது சூரியன் உதித்து சுமார் பத்து நிமிடங்களின் பின் ஆரம்பித்து சூரியன் நடுஉச்சிக்கு வர சுமார் பத்து நிமிடங்கள் இருக்கும் போது முடிவடைகின்றது என்பது பெரும்பாலான இமாம்களின் கருத்து.

நபி(ஸல்) மக்காவெற்றியின் போது என்னுடைய இல்லத்தில் குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதைவிடச் சுருக்கமாக வேறுஎந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததைநான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும், ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள் என உம்மு ஹானி (றழி) அவர்கள் குறிப்பிட்டார்கள். (புஹாரி)

ளுஹாத் தொழுகையானது நாம் எமது ஒவ்வொரு மூட்டுக்கும் ஸதகா கொடுத்த நன்மையை பெற்றுத் தருகின்து என ஹதீஸ் கூறுகின்றது. எனவேஎமது 360மூட்டுக்களுக்கும் ஸதகாகொடுத்த நன்மையை லுஹாத் தொழுகை மூலம் இலகுவாக அடைந்து கொள்ளலாம்.

'மனிதனின் உடலில் 360மூட்டுக்கள் உள்ளன. ஒவ்வொரு மூட்டுக்கும்  அவர் தர்மம் செய்தாகவேண்டும் என நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரேயாரால் இதைச் செய்யமுடியும் எனக் கேட்டபோது'பள்ளியில் துப்பப்பட்ட எச்சிலை புதைத்து விடுவது, பாதையில் தொல்லை தருவதை அகற்றி விடுவது,.... போன்ற செயல்களால் அந்த தர்மத்தை செய்யமுடியும். அதற்கு சக்திபெறாவிட்டால் ளுஹாவுடைய இரண்டு ரக்அத்துக்கள் எனக்கு அதைஈடு செய்யும்' என நபியவர்கள் கூறினார்கள்.  (அபூ தாவூத்)

மௌலவியா ஜெஸீலா (எம்.ஏ)
சில்மியாபுர


Add new comment

Or log in with...