வடிவுக்கரசி வீட்டில் கொள்ளை | தினகரன்

வடிவுக்கரசி வீட்டில் கொள்ளை

பிரபல நடிகை வடிவுக்கரசி தங்கியிருக்கும் தி.நகர் வீட்டில் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். பிரபல நடிகை வடிவுக்கரசி. கன்னிப் பருவத்திலேயே படத்தில் அறிமுகமான அவர் முதல் மரியாதை, அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது.

இவரது வீடு இருக்கும் அதே பகுதியில் மகள் வீடும் உள்ளது. கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 8 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 இலட்சம் ஆகும்.

இது குறித்து வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகன் பாண்டிபஜார் பொலிசில் புகார் செய்தார்.


Add new comment

Or log in with...