7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை | தினகரன்

7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இதையே திமுகவும் அதிமுகவும் தங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தி அதை அப்படியே தேர்தல் அறிக்கையாக அளித்துள்ளன.

இந்த நிலையில் இது சாத்தியம் இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் பேசுகையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை என்பது சாத்தியமே இல்லை என்றார்.


Add new comment

Or log in with...