சிநேகபூர்வ 20 – 20 கிரிக்கெட் போட்டி | தினகரன்

சிநேகபூர்வ 20 – 20 கிரிக்கெட் போட்டி

இந்தியா பெங்களுர் மிலேனியம் விளையாட்டுக் கழகத்திற்கும் பேருவளை ஸுபர் பீல்ட் விளையாட்டு கழகத்திற்குமிடையிலான சிநேகபூர்வ 20 – 20 கிரிக்கெட் போட்டி தொம்பகொடை இராணுவ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மிலேனியம் விளையாட்டுக் கழகம் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிட்கு 139 ஓட்டங்களை பெற்றதோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸுபர் பீல்ட் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 21 மேலதிக ஓட்டங்களால் பெங்களுர் மிலேனியம் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் அதிக ஓட்டங்களைப்பெற்ற மிலேனியம் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த தர்மேஷ் சிறந்த ஆட்டக்காரராகவும், அதிக விக்ெகட்டுக்களைப் பெற்ற ஸுபர் பீல்ட் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த முஹம்மத் ஷாம் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 பேருவளை விஷேட நிருபர்


Add new comment

Or log in with...