காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு கப்பல் சேவை | தினகரன்

காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு கப்பல் சேவை

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியா காரைக்கால் பகுதிக்கான கப்பல் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது. 

துறை முக அதிகார சபையின் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சந்திப்பில் கடல் வழி மார்க்கமான கப்பல் சேவை ஊடாக பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள், இலகு சேவை கட்டணங்கள், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சாதகங்களை அடைந்து கொள்ள முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ் ஆரம்ப கட்ட கலந்துரையாடலில் துறை முக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுலஹேசவிதாரண, சுங்கத் திணைக்கள உயர் அதிகாரி, குடிவரவு குடியகல்வு உயர் அதிகாரி, கப்பல் சேவை முகவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றார்கள். 

(திருமலை மாவட்ட விசேட நிருபர்)


Add new comment

Or log in with...