Thursday, March 28, 2024
Home » உக்ரைனுக்கு கடைசி ஆயுத உதவியை அளித்தது அமெ.

உக்ரைனுக்கு கடைசி ஆயுத உதவியை அளித்தது அமெ.

by Gayan Abeykoon
December 29, 2023 2:32 pm 0 comment

அமெரிக்க அரசாங்கம் உக்ரைனுக்குக் கடைசி முறையாக ஆயுதங்களை அனுப்பிவைத்துள்ளது.

தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் எஞ்சியுள்ள கடைசி ஒரே முறை இது என்று அமெரிக்கா அறிவித்தது.

250 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆகாயத் தற்காப்பு ஆயுதங்களும் மற்ற பல எறிகணைகளும் அனுப்பப்பட்டுள்ளன. ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிடும் உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்குவது தொடர்பில் அமெரிக்கா முடிவு செய்யவேண்டியுள்ளது.

மிகப் பெரிய ரஷ்யப் படையை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆயுத மற்றும் நிதி உதவிகள் அவசியமாகும்.

உக்ரைனுக்கு ஆதரவளிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்னுரிமை அளித்தார். ஆனால் அந்த விவகாரத்தில் அமெரிக்காவின் ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

உதவிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் கோருகின்றனர்.

அடுத்த மாதம் 8ஆம் திகதி செனட் சபை கூடும்போது, உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசி ஒப்புதல் பெற ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT