வடகொரியாவின் முதல் இலக்கு அமெரிக்கா அல்ல | தினகரன்

வடகொரியாவின் முதல் இலக்கு அமெரிக்கா அல்ல

வடகொரியாவின் கிம் ஜொங் உன்னின் கைகளில் அப்படி என்னதான் இருக்கிறது? அவரின் மீது ஏன் அண்டை நாடுகளும், உலக நாடுகளும் கண் வைத்து உள்ளன?" இக்கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதில் ஆயுதபலம்!

உலக நாடுகளின் எச்சரிக்கை மற்றும் நெருக்கடி, போதாக்குறைக்கு ஐ.நா வின் ஆணைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என பல பாரங்களை சுமக்கும் வட கொரியா, பத்து நிமிடங்களில் பல நாடுகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

வடகொரியாவில் இருந்து ஒரு அணு ஆயுதத் தாக்குதல் தொடங்கப்பட்டால் என்ன நடக்கும் என்பது பற்றிய விவாதத்தில் யூ.சி.எஸ் உலகளாவிய பாதுகாப்பு திட்டத்தின் ஒரு விஞ்ஞானியான டேவிட் ரைட் மற்றும் ஜெர்மனியின் எஸ்.டி ​ெராக்கெட் ஆய்வாளர் மார்கஸ் ஸ்கில்லர் ஆகிய இருவரும் கலந்து கொண்டு, அந்நிகழ்வு எப்படி அமையலாம்? எப்படி இருக்காலம் என்பதை விபரித்தனர்.

வட கொரியாவிடம், அமெரிக்காவை அடையக் கூடிய ஏவுகணை இல்லை என்று வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், கம்யூனிச நாடுகளில் ஒன்றான வடகொரியா அந்த பலம் தங்களிடம் உள்ளதாக கூறிய வண்ணம் உள்ளது. வட கொரிய அரசு நடத்தும் கே.சி.என்.ஏ செய்திச் சேவையில் வெளியான அறிக்கையின்படி பசுபிக் பெருங்கடல் முழுவதும் ஒரு பெரிய அளவிலான கனரக அணுவாயுதத்தை அனுப்பும் திறனை வட கொரியா கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு ஹெவ்ஸொங் -12 என்கிற ஏவுகணை சோதனைக்குப் பின்னர் வெளியிடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் தென்கொரியாவின் க்யுங்நாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கிம் டோங்-யுப் - உள்ளூர் ஊடகங்களுக்கு கூறுகையில் "ஒருவேளை அமெரிக்க இலக்குகளைத் தாக்கும் திறனை அவர்கள் (வட கொரியா) பெற்றிருந்தால் விஷயம் அமெரிக்காவின் கையை மீறி செல்வதையும், மற்றும் அது மிகவும் வேகமாக நடப்பதையும் யாராலும் தடுக்க முடியாது" என்றார்.

ரைட்டின் கணிப்பின்படி, வடகொரியாவில் இருந்து வெளியேற்றப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணையானது சான் பிரான்சிஸ்கோவை அடைய வெறும் அரை மணி நேரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

நியூ​ேயார்க் மற்றும் வாஷிங்டன் போன்ற நகரங்களைத் தாக்க 30 முதல் 40 நிமிடங்களுக்குள் ஆகும் என்று ஸ்கில்லர் மற்றும் ரைட் கூறியுள்ளனர். அதேவேளை கொரிய தீபகற்பத்தைச் சுற்றியிருக்கும் அமெரிக்க நட்பு நாடுகளின் நிலை இன்னும் மோசம். அவர்கள் தாக்கப்படுவதற்கான நேரம் மிக மிக குறைவாகவே இருக்கும் என்கிறார் அவர்.

ஸ்கில்லர் மற்றும் ரைட்டின் கருத்துப்படி, வடகொரியா ஒரு போரை தொடங்கும் பட்சத்தில் அதன் முதல் இலக்கு அமெரிக்காவாக இருக்காது, அது தென் கொரிய நகரமான புசனாக இருக்கலாம். ஏனெனில் அந்த நகரம்தான் அமெரிக்க கடற்படைக்கான ஒரு துறைமுகமாக பயன்படுத்தப்படுகிறது.


Add new comment

Or log in with...