மனிதர்களுடன் தொடர்பு கொள்ள ஏலியன்கள் முயற்சிக்கின்றனரா? | தினகரன்


மனிதர்களுடன் தொடர்பு கொள்ள ஏலியன்கள் முயற்சிக்கின்றனரா?

மனிதர்களுடன் வேற்றுக்கிரகவாசிகள் (ஏலியன்கள்) தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தற்போது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏலியன்கள் குறித்து நாம் பல்வேறு செய்திகளைப் படித்து வந்துள்ளோம்.

ஆனால் தற்போது ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக புதிய அதிர்ச்சிகரமாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பூமியில் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து உலாவுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் பார்ப்பதற்கு மனித உடலோடு சற்று மாறுபட்ட உருவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

சனி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஏராளமான நிலவுகள் இருக்கின்றன. இந்த நிலவுகளில் ஏலியன்கள் வாழ்வதற்கான ஏற்ற காலநிலைகள் இருக்கின்றன. மேலும் அங்கு அவர்கள் விண்வெளி நிலையத்தையும் கட்டமைத்துள்ளதாகவும் ஊகிக்கப்படுகிறது. இந்த ஏலியன்கள் விண்வெளியைப் பாதுகாப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் செயற்கைகோள்களை அனுப்பி கண்காணித்து வந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வருகின்றன.

விஞ்ஞான வளர்ச்சியில் ஏலியன்கள் மகிவும் கெட்டிகாரர்களாக இருக்கின்றனர். இவர்கள் பறக்கும் தட்டுகளையும் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பூமிக்கு வந்து செல்வதற்காகவும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இதை வேற்றுக்கிரக வாசிகளின் ஆராய்ச்சியாரான ஸ்டீபன் ஹாங்கிஸூம் தெரிவித்துள்ளார்.

1977ம் ஆண்டு கோடை கால இரவுப் பொழுது. அப்போது, விண்வெளி மற்றும் வேற்றுக்கிரக வாசிகள் குறித்து ஜெர்ரி ஹேமான் தனது ஆராய்ச்சியில் இருந்தார்.

அப்போது அவர் வைத்திருந்த கணினியில் சற்று மாறுபட்ட 'சிக்னல்' பதிவாகியிருந்தது. இது 'ரேடியோ சிக்னல்' ஆகும். சுமார் 72 நொடிகள் வரை தொடர்ச்சியாக இந்த சிக்னல் கிடைத்துக் கொண்டே இருந்தது.

இந்த ரேடியே சிக்னலை கணினி உதவியோடு பரிமாற்றம் செய்ய 3 நாட்கள் ஆனது. இந்த சிக்னல் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்துள்ளது.

இந்த 'ரேடியோ சிக்னல்' 120 ஒளியாண்டு தூரத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

அந்த ரேடியோ சிக்னல் 1420 மெகா கிட் அலைவரியைக் கொண்டுள்ளது. ஆனால் இன்று வரை தொலைக்காட்சிளுக்கு இந்த அலைவரியை ஒதுக்கீடு செய்வதில்லை. இந்த அலைவரிசைக்கு ஹைட்ரஜன் லைன் என்று பெயர்.


Add new comment

Or log in with...