புகைப்படம் எடுக்க முயற்சி; உலக முடிவிடத்திலிருந்து வீழ்ந்து பலி | தினகரன்


புகைப்படம் எடுக்க முயற்சி; உலக முடிவிடத்திலிருந்து வீழ்ந்து பலி

புகைப்படம் எடுக்க முயற்சி; உலக முடிவிஇடத்திலிருந்து வீழ்ந்து பலி-German Women Felldown and Dead-World End

உலக முடிவிடத்திலிருந்து வீழ்ந்த  ஜேர்மன் நாட்டு  பெண்ணொருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 7.50 மணியளவில் ஹோட்டன் சமவெளியிலுள்ள உலக முடிவிடத்தில் இருந்து பெண் ஒருவர் வீழ்ந்துள்ளதாக,, பட்டிப்பொல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று பிற்பகல் குறித்த பெண்ணின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது நண்பியுடன் உலக முடிவிடத்தைப் பார்ப்பதற்கு சென்றுள்ளனார். இதன்போது, அங்கு புகைப்படம் எடுக்க முயற்சி செய்த அவர் அங்கிருந்து இடறி வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.  இதனையடுத்து, பொலிசார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் வன ஜீவராசி அதிகாரிகள் இணைந்து குறித்த பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து இன்று (11) பிற்பகல், பலாங்கொடை, சமனலவெவ, நன்பேரியல் வத்தை பிரதேசத்தில் வைத்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


Add new comment

Or log in with...