தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் 150 கிலோகிராம் கஞ்சா மீட்பு | தினகரன்

தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் 150 கிலோகிராம் கஞ்சா மீட்பு

தலைமன்னார், ஊருமலை பகுதியில் சுமார் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.  

ஊருமலை கடற்கரைப்  பகுதியில் கடற்படையினர் இன்று (20) காலை முன்னெடுத்த சோதனையின்போதே,  இக்கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி செய்து  காணப்பட்ட 5 உரப்பைகளை சோதனையிட்டபோது, அவற்றினுள் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 

இதேவேளை, குறித்த பகுதியில் கடற்படையினர் தொடர்ந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...