22 நாட்களே இருக்கும் நிலையில் தெ.மா. சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார இராஜினாமா | தினகரன்

22 நாட்களே இருக்கும் நிலையில் தெ.மா. சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார இராஜினாமா

தென் மாகாண சபை ஏப்ரல் 10 இல் நிறைவு

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார, ஆளுநர் கீர்த்தி தென்னகோனிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

'ரத்தரன்' என அழைக்கப்படும் கிரிஷாந்த புஷ்பகுமார நேற்று (18) அவரது இராஜினாமா கடிதத்தை தன்னிடம் கையளித்ததாக, தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து பெப்ரவரி 28 ஆம் திகதி அக்மீமண பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை அடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தன்மீது தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் சுயாதீனமாக முகம் கொடுப்பதற்கும் இவ் வழக்கு விசாரணையை சுதந்திரமாக முன்னெடுக்க வசதியாகவும் மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜனாமா செய்ததாக கிரிஷாந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

தென்மாகாண சபை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நிறைவடைவதோடு, அதற்கு இன்னும் 22 நாட்களே மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...