முன்னாள் கடற்படை தளபதி CIDயில் வாக்குமூலம் | தினகரன்

முன்னாள் கடற்படை தளபதி CIDயில் வாக்குமூலம்

முன்னாள் கடற்படை தளபதி CIDயில் வாக்குமூலம்-Wasantha Karannagoda Appeared Before CID

மூன்றாவது நாளாக முன்னிலை

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வாக்குமூலம் வழங்குவதற்காக மூன்றாவது முறை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) ஆஜராகியுள்ளார்.

கடந்த 2008 - 2009 காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளுக்கு அமைவாக, அண்மையில் உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அவர், கடந்த மார்ச் 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் CIDயில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கி இருந்தார். கடந்த மார்ச் 11 ஆம் திகதி அவரிடம் சுமார் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

அந்த வகையில் இன்றைய தினம் (19) மூன்றாவது முறையாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...