வவுனியாவில் புதையல் தோண்டிய சம்பவம்: பொலிஸ் பொறுப்பதிகாரி, கான்ஸ்டபிள் கைது | தினகரன்

வவுனியாவில் புதையல் தோண்டிய சம்பவம்: பொலிஸ் பொறுப்பதிகாரி, கான்ஸ்டபிள் கைது

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் நேற்று (18)  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, ஈச்சம்குளம் பிரதேசத்தில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் கைது செய்துசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பெச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வவுனியா பூம்புகார் சுடலைக்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சக்கர் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கடந்த சனிக்கிழமை (16) இரவு 11.00 மணியளவில் அலவாங்கு, மண்வெட்டி, கோடரியுடன் நின்ற தென்பகுதியைச் சேர்ந்த 32, 35, 43, 48, 54வயதுடைய ஐவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் கையடக்க தொலைபேசியினை சோதனையிட்ட சமயத்தில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் இவர்களுக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் இவர்கள் புதையல் தோண்ட முற்பட்ட சமயத்தில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சார்ஜன் ஒருவரும் சம்பவ இடத்திற்கு அருகே காவலில் நின்றமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கோவில்குளம் குறூப் நிருபர் - காந்தன் குணா)

 


Add new comment

Or log in with...