புனித தோமியர் கல்லூரிக்கு எதிராக றோயல் 1 விக்கெட்டால் த்ரில் வெற்றி | தினகரன்

புனித தோமியர் கல்லூரிக்கு எதிராக றோயல் 1 விக்கெட்டால் த்ரில் வெற்றி

புனித தோமியர் கல்லூரிக்கு எதிராக நீல நிறங்கள் சமரின் 44 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டியில் றோயல் கல்லுௗரி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புனித தோமியர் க கல்லூரியின் ஆதிக்கத்தை முறியடித்து றோயல் கல்லுௗரி மஸ்டாங் கிண்ணத்தைக் கைப்பற்றியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக புனித தோமியர் கல்லூரி தொடர்ச்சியாக இந்த கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்புடன் நடந்த இந்தப் போட்டியில் 256 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பாடிய றோயல் கல்லூரி ஒருகட்டத்தில் தடுமாற்றம் கண்டபோது பின் வரிசையில் வந்த லஹிரு மதுஷங்க 17 பந்துகளில் ஒரு பெளண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

றோயல் கல்லூரிசார்பில் ஆரம்ப வரிசையில் கவிந்து மதாரசிங்க (51), அஹன் சச்சித்த (67) மற்றும் கமில் மிஷார (68) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர்.

இதன் மூலம் அந்த அணி 48 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சித்தார ஹப்புஹின்ன மற்றும் முதல் வரிசையில் ரியான் பெர்னாண்டோ தலா 51 ஓட்டங்களை பெற்றனர். மத்திய வரிசையில் உமயங்க சுவாரிஸ் 89 பந்துகளில் 8 பெளண்டரிகளுடன் 81 ஓட்டங்களை பெற்று வலுவான ஓட்டங்களை எட்ட உதவினார்.


Add new comment

Or log in with...