போலந்து சர்வதேச உணவு, குடிபான கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் | தினகரன்

போலந்து சர்வதேச உணவு, குடிபான கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள்

போலந்து நாட்டின் தலைநகர் வார்சோவில் நடைபெற்ற சர்வதேச உணவு மற்றும் குடிபான கண்காட்சியில் இலங்கையின் முன்னணி தேயிலை நிறுவனங்கள் நான்கு பங்கெடுத்தன.

மார்ச் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற இக்கண்காட்சியில் தம்ரோ, ஹல்பே, சம்லி, சிலோன் ஃப்ரஷ் ரீ ஆகிய நான்கு நிறுவனங்களும் தேயிலை சபை மற்றும் போலாந்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து பங்கெடுத்திருந்தன. 

வருடா வருடம் நடைபெறும் இந்தப் பாரிய சர்வதேசக் கண்காட்சியில் 300ற்கும் அதிகமான கம்பனிகளும் பங்கேற்பதுடன் அவற்றின் பலதரப்பட்ட உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மதுசாரம் மற்றும் மதுசாரம் சாராத குடிபானங்கள், தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள், இயற்றை உணவுகள், குழந்தைகளுக்கான உணவுகள் என பல உணவுகளும் குடிபானங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.  

உணவுத் தயாரிப்பு, போக்குவரத்து, கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக உணவுப் பொருட்களை அனுப்புவது, குளிர்ப்படுத்திப் பாதுகாப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. கிழக்கு ஐரோப்பிய சந்தையில் செயற்படும் உணவுக் கொள்வனவாளர்கள், விநியோகஸ்தர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.     


Add new comment

Or log in with...