'பஜாஜ் கியூட்' குவாட்ரிசைக்கிள் சந்தைக்கு அறிமுகம் | தினகரன்

'பஜாஜ் கியூட்' குவாட்ரிசைக்கிள் சந்தைக்கு அறிமுகம்

குறைந்த விலையில், வசதியான போக்குவரத்துத் தீர்வுகளின் ஊடாக மக்களுக்கு பாரிய சேவையாற்றிவரும் இலங்கையின் பாரிய வாகன நிறுவனமான டேவிட் பிரிஸ் மோட்டார் கம்பனி லிமிடட், அண்மையில் நான்கு சக்கர வாகனமான பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிளை அறிமுகப்படுத்தியது.  

இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (15) பத்தரமுல்லையிலுள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி லிமிடட் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்நிறுவனத்தின் தலைவர் டேவிட் பீரிஸ் தலைமையில் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.  

பஜாஜ் கியூட் ஸ்மார்ட் குடும்பம் ஒன்றுக்கு ஏற்ற ஸ்மார்ட் வாகனமாகும். குவாட்ரிசைக்கிள் உலகத் தரம்வாய்ந்த DTSi   தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். இதனுடைய இயந்திரமானது 9.7 கிலோவட்ஸ் 5500rpm வலுவை வழங்கக் கூடிய 216.6cm3 உடையதாகும். ஆகக் கூடிய வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் என்பதுடன், கட்டுப்படுத்தப்பட்ட எடை 500 கிலோ கிராமைவிடக் குறைவாகும்.  

காரைப் போன்று இடவசதிகளைக் கொண்டதாகவும், மூடப்பட்ட அமைப்பையும்கொண்டுள்ளது. சாரதி மற்றும் பயணிகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பானபயணத்தை உறுதிசெய்கிறது. பொதிகளை வைத்துக் கொள்வதற்குப் போதுமானஇடவசதி மற்றும் பாதுகாப்பான ஓட்டத்தை உறுதிப்படுத்தும் வேகத்தையும்கொண்டுள்ளது. இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது என்னவெனில் 40 வீதத்தை விடக் குறைந்த கார்பன் புகை வெளியேற்றப்படுவதுடன், சிறிய காரைவிட குறைந்தளவு எரிபொருளே தேவைப்படுகிறது.  

‘பஜாஜ் கியூட்’ அறிமுக விலையான 1,067,450 ரூபாவுக்கு நாடு முழுவதிலும் உள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி காட்சியறைகளில் கிடைக்கிறது. அறிமுகநிகழ்வில் வாடிக்கையாளர்களுக்கான கியூட் வாகனங்களை டேவிட் பீரிஸ் கம்பனி லிமிடட்டின் தலைவர் டேவிட் பீரிஸ் வழங்கிவைத்தார்.      


Add new comment

Or log in with...