பொலிஸாரை தாக்கிய பி.சபை தலைவரின் உறுப்புரிமை நீக்கம் | தினகரன்

பொலிஸாரை தாக்கிய பி.சபை தலைவரின் உறுப்புரிமை நீக்கம்

பொலிஸாரை தாக்கிய பி.சபை தலைவரின் உறுப்புரிமை நீக்கம்-Embilipitiya Pradeshiya Sabha Chairman's PS Membership Removed

எம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவர், எம்.கே. அமில, பிரதேச சபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அவர், தேர்தல் ஆணைக்குழுவினால் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், எம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவர் எம்.கே. அமிலவுக்கு, கடந்த வருடம் ஜூலை 17ஆம் திகதி, மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, அவர் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...