நுரைச்சோலை மின் நிலையத்தில் கோளாறு | தினகரன்

நுரைச்சோலை மின் நிலையத்தில் கோளாறு

நுரைச்சோலை மின் நிலையத்தில் கோளாறு-Norochcholai Power Plant Failure

பல பகுதிகளில் மின்தடை; இடைக்கிடை மின்தடை ஏற்படலாம்

நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல் மின் நிலையத்தின் பல வகைகளில் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று முற்பகல் அளவில், நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள மூன்று மின்பிறப்பாக்கிகளில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மின்பிறப்பாக்கியின் செயற்பாடு தடைப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மின்பிறப்பாக்கியின் தொழிற்பாட்டை சீரமைத்து மீண்டும் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 


Add new comment

Or log in with...