மட்டக்களப்பு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்சார் தகைமை சான்றிதழ் | தினகரன்

மட்டக்களப்பு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்சார் தகைமை சான்றிதழ்

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில்சார் தகைமை NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கான ஆரம்ப விழா இன்று (18) மட்டக்களப்பு தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் தவிசாளரும், வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டின் சிந்தனை வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள சுமார் ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளருமான கே. துரைராஜசிங்கம், தற்போதைய கிழக்குமாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட கல்வி அதிகாரிகளும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ.சக்திவேல்)  


Add new comment

Or log in with...