ஐந்து இலட்சம் வீடுகள் தோட்டங்களில் கட்டவேண்டியுள்ளது | தினகரன்

ஐந்து இலட்சம் வீடுகள் தோட்டங்களில் கட்டவேண்டியுள்ளது

தோட்டங்களில் வீடுகளைக் கட்ட வேறு அமைச்சுக்கள் இருந்தாலும், ஐந்து இலட்சம் வீடுகளை தோட்டங்களில் கட்டவேண்டியுள்ளது. இவற்றை கட்டிமுடிப்பதற்கு 50 வருடங்கள் தேவைப்படும்என்று பாராளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் புத்தசாசன, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.  

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  

தோட்டங்களில் வீடுகளைக் கட்ட வேறு அமைச்சுக்கள் இருந்தாலும், ஐந்து இலட்சம் வீடுகளை தோட்டங்களில் கட்டவேண்டியுள்ளது. இவற்றை கட்டிமுடிப்பதற்கு 50 வருடங்கள் தேவைப்படும். மலையகப் பகுதிகளின் வீடுகளை அமைக்கும் பொறுப்பை உங்கள் அமைச்சின் கீழ் எடுத்து அவற்றை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

ஏழு பேர்ச் காணிகளில் வீடுகளை மாத்திரமே அமைக்க முடியும். தோட்ட மக்களுக்கு 15 பேர்ச் காணிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுவரெலிய மாவட்டத்தில் ஒரு கலாசார மண்டபம் கிடையாது. தோட்டங்களில் பல கோவில்கள் உடைந்துபோயுள்ளன. அவற்றை புதுப்பிக்க வேண்டும்.

ஆசிரியர்கள், தபால்காரர்கள் என பல்வேறு அதிகாரிகளும் தோட்டக் குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். மலையகத்துக்கான வீடமைப்புத் திட்டங்களில் தனியார் தோட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை. இதனால் அங்கு பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  


Add new comment

Or log in with...