சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் | தினகரன்

சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும்

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதால் அவற்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்தார்.  

கடந்த வருடம் நடைபெற்ற பரீட்சையில் 6,56 641 மாணவர்கள் தோற்றினார்கள். விடைத்தாள் திருத்தும் பணிகள் டிசம்பர் 23 இல் ஆரம்பமானது. 108 நிலையங்களில் 35 ஆயிரம் ஆசிரியர்களின் பங்களிப்புடன் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதோடு அவற்றை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் இடம்பெறுவதாக அறிய வருகிறது.(பா)  


Add new comment

Or log in with...