கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா | தினகரன்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழாத் திருப்பலி  நேற்றுக் (16) காலை  யாழ். மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் (15) நடைபெற்ற கொடியேற்றத்தைத் தொடர்ந்து  தவக்கால சிலுவைப்பாதை தியானம்,  திருப்பலி  நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

திருவிழாவில் இலங்கையிலிருந்தும்  தமிழகத்திலிருந்தும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். 

பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள், தற்காலிகத் தங்குமிட வசதிகள், போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன.

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின்  வருடாந்தத் திருவிழாவில் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமில் போல் அடிகளார், தமிழகத்தின் கோட்டுர் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய நஷ்ரீன் சூசை ஆண்டகை,  யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுனரதி தெய்வேந்திரம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

(புங்குடுதீவு குறுப் நிருபர்-பாறுக் ஷிஹான்) 


Add new comment

Or log in with...