பொறுப்பேற்காத நிலையில் பிக்குவின் சடலம் | தினகரன்

பொறுப்பேற்காத நிலையில் பிக்குவின் சடலம்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பிக்கு ஒருவர் உயிரிழந்து 50 தினங்களானபோதும், குறித்த சடலம் எவராலும் பொறுப்பேற்கப்படாதுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளனர்.

எனவே, குறித்த பிக்குவின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம்,  வைத்தியசாலை நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேற்படி வைத்தியசாலையில் கடந்த டிசெம்பர் 28ஆம் திகதி அமிதாலோக தேரர் எனும் பெயரில் அனுமதிக்கப்பட்ட குறித்த பிக்கு, கடந்த ஜனவரி 30ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்தார். கிரிவன்துடுவ எனும் முகவரியை சேர்ந்தவர் என்று தன்னை அடையாளம் காட்டிய ஒருவரே, பிக்குவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினரின் விசாரணையின்போது, குறித்த நபர் தெரிவித்த முகவரி போலியானது என்று தெரியவந்துள்ளதுடன், குறித்த சடலமும் இதுவரையில் பொறுப்பேற்கப்படாதுள்ளது.

இதனையடுத்து, குறித்த பிக்குவின் சடலத்தை யாரிடம் ஒப்படைப்பது என்று வைத்தியசாலை நிர்வாகத்தினர் திண்டாடுகின்றனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...