காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி பணம் கேட்ட மாணவர்கள் கைது | தினகரன்

காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி பணம் கேட்ட மாணவர்கள் கைது

காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி பணம் கேட்ட மாணவர்கள் கைது-Threatening Naked Picture-2 Students Arrested
(வைப்பக படம்)

 

ரூபா 60 இலட்சம் பெற முயற்சித்த வேளையில் சிக்கினர்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 60 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த பாடசாலை  மாணவர்கள் இருவர் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபாவையும்  இப்பகுதியை சேர்ந்த சஞ்சீவனீ என்பவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாவையும் கப்பமாக பெற முயற்சித்தமை வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களான, இம்மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சிறுவர் தடுப்புக்காவலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் திருமதி எச்.ஐ.கே. காஹிங்கல உத்தரவிட்டார்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தின் பல்லெகம, மொரகெட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுகளையுடைய இம்முறை க.பொ.த. உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் இருவரே  இக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்கள் கப்பம் கேட்டு பயமுறுத்திய தொலைபேசி இலக்கங்களை, தொழிநுட்ப உதவியின் மூலம் இனங்கண்டு மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, மறைந்திருந்த இவர்களை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் இருவரும் பல இளம் யுவதிகளுடன் காதல் லீலைகளில் ஈடுபட்டுள்ளதோடு, அது தொடர்பான புகைப்படங்களை காண்பித்து அவர்களையும் பயமுறுத்தி பணம் பெற முயற்சித்ததாகவும் நீதிமன்றத்தில் பொலீசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)

 


Add new comment

Or log in with...