சரணாலயத்தில் மான் வேட்டையாடியவர் துப்பாக்கியுடன் கைது | தினகரன்

சரணாலயத்தில் மான் வேட்டையாடியவர் துப்பாக்கியுடன் கைது

 

உடவளவ சரணாலயத்தில் மான் வேட்டையாடிய ஒருவரை பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, ரி-56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்களை பயன்படுத்தக்கூடியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (17) எம்பிலிப்பிட்டிய மவ்ஆர பகுதியின் நீர் நிலையொன்றுக்கருகில், அச்சரணாலயத்தின் பாதுகாப்பு காரியாலய அதிகாரிள் குறித்த நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்த மானையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மவ்ஆர பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான விவாகமானவர் என அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, இப்பகுதியிலுள்ள காட்டுப் பகுதிகளிலும் சரணாலயங்களிலும் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மிருக வேட்டைகளுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பிருக்கலாமென நம்பப்படுகின்றது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - எம். பாயிஸ்)
 


Add new comment

Or log in with...