சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றவர் உயிரிழப்பு | தினகரன்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றவர் உயிரிழப்பு

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லக்சிறி பெர்ணாந்து  தெரிவித்தார்.

அலபலாவல எனும் இடத்தைச் சேர்ந்த முத்துபண்டார (45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது குடும்பத்தினருடன் நல்லதண்ணி, சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது ஊசிமலைப் பகுதியில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன்  அவர் மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் மஸ்கெலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக  மஸ்கெலிய வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய தெரிவித்தார்.

(மஸ்கெலியா மேலதிக நிருபர் செ.தி.பெருமாள்)


Add new comment

Or log in with...