திருகோணமலையில் இரண்டாவது பொருளாதார நுழைவாயில் | தினகரன்


திருகோணமலையில் இரண்டாவது பொருளாதார நுழைவாயில்

எமது பிரதான பொருளாதார நுழைவாயில் கொழும்பிலிருந்து திருகோணமலையில் அமைய இருக்கின்றது. திருகோணமலையிருந்து சீனா, லாவோஸ், கம்போடியா போன்ற வலய நாடுகளுக்கு கதவுகளை திறந்து வியாபாரம் செய்ய இருக்கின்றோம் என பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடப்பட்டு, தாங்கக்கூடியதும் சிறப்பானதுமான நகரமயமாக்கலை நோக்கி எனும் தொனிப்பொருளின் கீழான 'மெகா மைன்ட்' வேலைத்திட்டம் தொடர்பான திருகோணமலை வாழ் சமூகத்திற்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலையில் இடம்பெற்றது.நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், 1948இல் சுதந்திரம் பெற்றாலும் கூட பிரித்தானியர் இந்த நாட்டினுடைய இயற்கைத் துறைமுகத்தை கைவிடவில்லை.  

இன்று எமது நாட்டில் ஊழல், மோசடி மலிந்து காணப்படுகிறது. இதற்கு அனைவரும் தூண்டுகோளாக இருக்கின்றனர். இந் நாட்டில் இருப்பது பயனில்லை. இதனால் அனேகமானோர் நாட்டைட விட்டு வெளிநாடுகளுக்கு சென்று வாழ்கின்றனர். நாட்டின் மொத்த சனத்தொகையில் 15%மானவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.எமது நாட்டவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும் எமது நாட்டைப் பற்றி தப்பான கருத்துக்களை கூறி வருகின்றனர்.  

நாட்டைப் பற்றி தப்பாக பேசினாலும் நாட்டில் நல்ல விடயங்களும் காணப்படுகின்றது. சுகாதாரத்துறை சிறப்பாகவுள்ளது. சிசு மரண வீதம் குறைந்துள்ளது. அதேபோன்று கல்வி உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. மனித வள அபிவிருத்தி பற்றி பார்க்கின்ற போது எமது நாட்டின் மனித வள அபிவிருத்தி சிறப்பாக காணப்படுகின்றது. எமது நாட்டில் நிதிப் பிரச்சினை தான் உள்ளது.   

(ரொட்டவெவ குறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...