உடல் பருமன், உபாதைகளை குணமாக்கும் 'கிரீன்ரீ' | தினகரன்

உடல் பருமன், உபாதைகளை குணமாக்கும் 'கிரீன்ரீ'

மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை

பச்சைத் தேயிலை(கிரீன் ரீ) உடற்பருமன் ஆபத்துகளைக் குறைப்பதோடு மோசமான ஆரோக்கியத்துக்கான உடற்குறிகளையும் குறைப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எலிகளை வைத்து மேற்கொண்ட பரிசோதனைகளில் 'கிரீன் ரீ' சாறு கொடுக்கப்படும் எலிகள் இது கொடுக்கப்படாத எலிகளை விட ஆரோக்கியமாக, நோய்க்கூறுகள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்புகள் நீரிழிவு நோய் பாதிப்பு மற்றும் இருதய நோய் பாதிப்புகளையும் குறைக்கும் 'க்ரீன் ரீ' குறித்த மேம்பட்ட ஆய்வுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

“இந்த ஆய்வு குடல் பக்டீரியாவின் வளர்ச்சியை கிரீன் ரீ ஊக்குவிப்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது. இந்த நல்ல பக்டீரியா மூலம் சில நல்ல ஆரோக்கிய விளைவுகள் உடலில் ஏற்பட வாய்ப்புள்ளதைக் காட்டுகிறது.குறிப்பாக உடற்பருமன் நோய்” என்று ஒஹியோ பல்கலைக்கழக பேராசிரியரும் இந்த ஆய்வின் தலைவருமான ரிச்சர்ட் புரூனோ தெரிவித்தார்.

குடல் நாள நுண்ணுயிரியில் ஏற்படும் எதிர்மறை மாற்றங்களே உடற்பருமன் நோய்க்குக் காரணமாக முந்தைய ஆய்வுகள் எடுத்தியம்பின. இந்நிலையில் கிரீன் ரீ நல்ல பக்ட்ரீயாவை உருவாக்க உதவுகிறது என்கிறது இந்த ஆய்வு.

“சிலர் உடல் எடைக் குறிப்புக்கு கிரீன் ரீ உதவும் என்று கூறுகின்றனர். ஆனால் பிற ஆய்வுகள் கிரீன் ரீ பெரிய அளவில் உதவவில்லை என்கின்றனர். இதற்குக் காரணம் அந்தந்த வாழ்க்கைமுறை காரணிகளினால் ஏற்படும் உணவுப்பழக்கமுறை என்ற சிக்கல் நிறைந்த விடயங்கள் உடன் காரணிகளாக இருக்கலாம்” என்கிறார் புரூனோ. கிரீன் ரீ ஆசிய நாடுகளில் பரவலாக புழக்கத்தில் உள்ளது. மேற்கு நாடுகளில் தற்போது அதிகம் பரவி வருகிறது. காரணம் அதன் ஆரோக்கியப் பயன்பாடுகளே.

‘கேடெகின்ஸ்' என்ற அழற்சி எதிர்ப்பு இரசாயனம் கிரீன் ரீயில் காணப்படுகிறது, இது புற்றுநோய் எதிர்ப்புடனும் இருதய மற்றும் ஈரல் நோய் எதிர்ப்புடனும் தொடர்புபடுத்துகிறது.

மேலும் கிரீன் ரீ நச்சு பக்டீரியாவான எண்டோடாக்சின் இயக்கத்தைத் தடுக்கிறது, இதனால் இது இரத்த ஓட்டத்தில் கலக்காமல் காக்கப்படுவதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்தப் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட கிரீன் ரீ அளவு நாளொன்றுக்கு 10 கப்கள். “இது பெரிய அளவிலான க்ரீன் ரீ நுகர்வுதான். ஆனால் உலகின் சிலபகுதிகளில் நாளொன்றுக்கு 10 கோப்பை க்ரீன் ரீ என்பது சகஜமானதே” என்கிறார் ஆய்வுத்தலைவர் புரூனோ.

கிரீன் டீ பற்றிய ஆய்வுகள் தொடரும் என்று ஆய்வுத் தலைவர் புரூனோ தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...